இன்று நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2024 அறிவிப்புகளின் பகுப்பாய்வு, முக்கிய குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே பெறுங்கள்.

பட்ஜெட்  2024  முக்கிய அறிவிப்புகள்


முதல் திட்டத்தின்படி முதன்முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். அரசு வழங்கும் முதல் மாத ஊதியத்தொகை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கல்விக்கடன் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1,000 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.

நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு.

அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் 1 கோடி விவசாயிகளை ஈடுபடுத்த திட்டம்.

பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்.

ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு.